காண்டம் பார்க்க போனேன்!!!!!
எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்!!!
உன் அம்மா பெயர் ……………..
உன் அப்பா பெயர் …………………..
நீர் campus இலை படிக்கிறீர்..
ஓம் ஒம் எல்லாம் உண்மை.
(எப்படித்தான் கண்டுபிடித்திருப்பார்களோ,
Birth certificate எடுத்திருப்பாங்களோ)
அப்படியே கொஞ்சம் என்னைப்பற்றி சரியாவே சொன்னார்!!!
கொஞ்சம் போக முக்கியாமாக நான் கேட்க்கவிருந்த விடயத்துக்கு வந்தார்!!!!
நீ ஒரு பெண்ணை love பண்ணுறாய்..
ஓம் ஓம் ஆர்வத்தில் அகலாத்திறக்கின்றன கண்கள்..
அவள் கண்கள் மீன் போல கூர்மையானவை
அவள் மூக்கு சிவந்த மிளகாய் போல
அவள் கூந்தல் தொடும் அவள் பாதம்
அவள் நிறம் உன்னிலும் நிறம்,பொன்னிறம்,,
மொத்தத்திலை ஒரு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள்
இலங்கயின் தேவதை எண்டு சொல்லலாம்.
சமகல்வி!
நீ maths படிச்சா அவளும் maths படிச்சிருப்பாள்,
சம வயது, ஒருவயது குறைவாகக்கூட இருக்கலாம்....
அவள் குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளை.
குடும்பத்தில் முதல் பிள்ளை இல்லை.
பெயர் உயிரில் ஆரம்பித்து வல்லின உயிர்மெய்யில் முடியும்
5 எழுத்து பெயர்.
மெல்லினம் இடையே இருக்கும்..
அ ஆ இ ஊ போன்ற அழுத்துக்களில் ஆரம்பிக்கலாம்.
மூன்றெழுத்து செல்லப்பெயரும் உண்டு.
ஓம் ஓம் என்ன எல்லாம் பார்த்தமாதிரி சொல்லுறியள்
எப்படி அண்ணே முடியுது உங்களால???
ஆனால் தம்பி
என்ன ஜயா????
அவள் உன்னை love பண்ணல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காணும் ஜயா!!இத்தோடை நிறுத்துங்கோ!
(எப்படித்தெரிந்திருக்கும் அவள் love பண்ணலை எண்ட விடையம் இவருக்கும்?????????)
யாவும் கற்பனை!





0 comments:
Post a Comment