சீதனம்

“இந்தியா உத்தரப்பிரதேசம்- லக்னோ ல இருந்து 300km தொலைவில இருக்கற ஒரு கிராமத்தில (G)குஞ்சன் என்கிற ஒருத்தர் கட்டிய மனைவி ஆஷா தேவியிடம் மீண்டும் மீண்டும் சீதனம் கேட்டு நச்சரித்து முடிவில , மனைவியோட கூந்தலை முற்றாக மழித்து மொட்டையாக ஊர்வலம் கூட்டிபோயிருக்க்றார்"

இது ஹோசியா அக்காவிடம் சுட்டது!!!
நாம் ஏன் இந்தியா செல்ல வேண்டும். எமது நாட்டில் இந்த சீதன கொடுமை இல்லையா?எமது நாட்டின் கல்வியறிவு விகிதம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது எவ்வளவு அதிகம்.ஆனாலும் இருக்கிறது சீதனகொடுமை.எனக்கு ஏன் சீதனம் வாங்குகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.கேட்டால் அப்பா அம்மாவை சாடுகிறார்கள். ஏன் நீங்கள் சுயமாக சிந்திக்க தெரியாதவர்களா.?
சுயமாக சம்பாதிக்க தெரியாதவர்களா?
சுயமாக சிந்திக்க சம்பாதிக்க தெரியாதவர்க்கெல்லாம் ஏன் திருமணம்.?
அவன் வாங்கிறான் என்பதற்க்காக நீ வாங்க வேண்டுமா? முதலில் வாழ்க்கை என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள். வெறுமனே பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை!
இலங்கைத்தமிழருக்கு வாழ்க்கையின் அர்த்தம் மறந்து போய் பல வருடங்கள் ஆகின்றன!
சொல்வதற்க்கு இருக்கின்றதே சாட்டு யுத்தம்.முப்பது வயது தாண்டு மட்டும் பெற்றோரின் உதவியை எதிர்பார்ர்கிறோம். பின் சீதனத்தை எதிர்பார்க்கிறோம்.
கேட்டால்,எங்கடை நாட்டிலை சீதனம் இல்லாமல் சமாளிக்கேலாதாம்!
ஏன் சகோதர மொழி பேசுபவர்கள் சீதனம் வாங்குபவர்களா??
காதலித்து பின் சீதனம் கேட்டு காதல் குலைந்த சந்தர்ப்பங்கள் எத்தனை உண்டு??
சீதனம் வங்குபவர்கள்,கொடுப்பவர்கள் சொல்லும் காரணங்கள்
1.சீதனம் புது வாழ்க்கையை தொடங்க உதவுமாம்.
2.சீதனம் கொடுக்காவிட்டால் status போய்விடும்
3.சீதனம் கேட்காவிட்டால் எதாவது குறைபாடு எண்டு நினைத்திடுவார்களோ?
4.பெண் கொஞ்சம் அழகு குறந்தால் சீதனத்தை கூட்டிகொடுத்து சமாளிதிடலாம்.
5.தங்கச்சிக்கு கொடுக்க வேண்டும்.
6. நான் படிக்க அம்மா பட்ட கடனை அடைக்க வேண்டும்.
இதில் எத்தனை காரணங்கள் நியாயபூர்வமானவை????
சிந்தியுங்கள்!!!!!!!!

என்னை பொறுத்தவரை சீதனம் வாங்கி ஆண்கள் ஆண் விபச்சாரி ஆகிடாதீர்கள்….
ஒவ்வொருவரும் நாங்கள் திருந்துவோம்!!
சமுதாயம் திருந்தும்!!
எத்தனை பேர் சீதனம் வாங்கமாட்டோம் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள்??

0 comments: