என்காதலின் சில நினைவுகள்

ஏதாவது கண்காட்ச்சி, ஆர்ப்பாட்டம் என்றால் முன்னிற்பேன் 
அங்கே அவள் வருவாள் என்ற நம்பிக்கையில்.
((SCHOOL UNIFORM இலை பெண்கள் அழகே தனி))

அப்படித்தான் ஒருமுறை JAFFNA UNIVERSITY இல் கண்காட்ச்சி நானும் போனேன் எமது பாடசலை நண்பர்களுடன்………
”அடெய் உண்டை சரக்கு வந்ததம்டா வா தேடுவோம்”
(அவங்கடை சரக்கு யார் என்று சத்தியமா எனக்கு தெரியாது என்பது அவனுக்கு தெரியாது)
நண்பர்களையும் கூட்டிகொண்டு
தேடினேன் தேடினேன் காணவேயில்லை.
அட இது SCIENCE கண்காட்சிதானே அவள் வரமாட்டாள் தானே 
மனம் சமாதானம் சொன்னது…..
ஆனால் எங்கோ தூரத்தில் அவள் சாயலில் ஒருத்தி….
தேடினேன் தேடினேன்
காணலை…
வீடுதிரும்ப வருகையில் அவளது VAN
எதற்க்கும் எட்டிப்பார்க்கிறேன்
உள்ளே அவள் சாயலில்
இல்லை அவளேதான்
அன்றைய நாளை வீணாக்கிவிட்டேனோ???
மனம் ஏதோ செய்தது…..
என்ன செய்ய?
விதி.
வீடு திரும்புகையில் அவள் SCHOOL பாதையை பயன்படுத்துவது வழக்கம்…
அங்கே அவள் வந்த VAN வந்திட்டுது…..
புளியடியில் காத்திருக்கிறேன் நண்பர்களுடன் 
யூஸ் குடிக்கும் சாக்கில்.
அவள் வர முன்தொடர்கிறது என் சைக்கிள்……
5 நிமிட வீதி உலா
தேவி(கள்)தரிசனம்
முக்கியசந்தி நண்பர்களுக்கு BYE
நானும் அவளும் மட்டும் 
முன்பின்னே!!!
தூரே தெரிகிறது,
அவள் சித்தி நிற்பது.
கால்கள் வேகமாகின்றன....
ஆனால்,!
அதிர்ச்சி!
அவள் சித்தி என்னை மறிக்கின்றார்,
அவள் வீட்டுக்கு முன்னால்.
நெஞ்சு படபடத்து..
என்ன கேட்க்க போறங்களோ???
”தம்பி எக்சிபிசனாலையோ வாரீர்” 
”………… (பெயரைச்சொல்லி) காணலை” என்றார் நான் அவளை
காதலிப்பது தெரியாமல் என்னிடமே????
பின்னலைதான் வாறாள் என்று சொல்லவா முடியும்?????
ஏதோசொல்ல எடுக்க
”சித்தி நான் வந்திட்டன்” (VOICE கூட நல்லத்தான் இருக்கு) என்றபடி சின்ன சிரிப்புடன் அவள்
என்னுள் ஒரு சிரிப்பு
எம் சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் சித்தி
நான் அவள் சித்தியை சினேகிதம் பிடித்த சந்தோசத்துடன் வீடு நோக்கி…….

உண்மைச்சம்பவமோ????
எனக்கு தெரியாது!!!
வாசித்து புரிந்துகொண்டாசரி!!!!!!!!!!

முருகன் தரிசனம்

எல்லோரும்
கோவிலுக்கு போவது...
சாமி கும்பிட,
முருகனுக்கு இரண்டு
எனக்கு ஒன்றை set பண்ண உதவ மாட்டானா என்ன???
முருகா sorry!
உனக்கு மட்டும் தெரிந்ததை உலகுக்கு சொல்றேன்!
 
தினம் தினம் போவேன் முருகன் கோவில்...
பக்கத்தில் இருக்கும் தேவி கோவிலில்
எப்பவாவது தேவி தரிசனம்!
பின் தேவி முருகன் கோவிலுக்கே வந்து தரிசனம் தர தொடங்கினாள்...
ஆனால் அந்த timing சச்சினுக்கும் வராது..
அப்படி time பண்ணி போவேன் கோவிலுக்கு...

becon முடிய வந்து கிருஷ்ணா கடையில் ஒரு பஜார் போடுறது.
தேவி வரும் நேரமானால் சைக்கிள் வீட்டு பக்கம் திரும்பிடும்...
தூரத்தே அவள் வருவது தெரிந்தால்...
‘’மச்சான் அம்மா கடைக்கு போகணும் எண்டவாடா நான் போட்டு வரட்டே?”
(((( என் காதலை அவள் ok சொல்லி பின்னும் அவங்களுக்கு நான் love பண்ணுறதும், ஏன் இடையிலை நான் escape ஆறனான் என்றும் தெரியாது..... நான் பெருமையாய் சொன்ன பின் தான் தெரியும்)))))

சைக்கிள் கிழம்பிடும் அவள் பின்னே!!!!
அவளை வீட்டு வாசல் வரை விட்டிட்டு வீடு போவேன்
“அம்மா கடைக்கு போகணுமோ” வாசலில் இருந்தே குரல் குடுப்பேன்.
ஓம் என்றால் சரி...
இல்லை என்றால் 
"mixture வேண்டணும் காசு எடுங்க”
அவசர அவசரமா முகம் கழுவி சாமி கும்பிட்டிட்டு time பார்ப்பேன் 10 minutes ஆகியிருந்தால் சைக்கிள் வெளிக்கிடும்,,, 
இல்லை என்றால் காத்திருந்து வெளிக்கிடும்.....

ரோட்டிலிருந்து பார்க்க கோவிலடியில் சைக்கிள் நின்றால் தெரியும், தெரிந்தால் கோவிலை நோக்கி பயணம்...
இல்லை என்றால் ஒன்று இரண்டு வட்டம் அடிக்கும்....
வட்டம் அடிக்கும் போது தெரிந்த அண்ணாமார்கள், ......................
ஒருவாறு சமாளித்திடுவேன்......
((நானே பேனையை கீழே போட்டு பின் எடுப்பது!
எது சைக்கிளில் பிழை மாதிரி இறங்கி நிண்டு பார்ர்கிறது))
கோவிலில் நானும் அவளும் முருகனும் ஐயரும் மட்டும்...
சிலநேரம் ஐயர் கூட இல்லை!!
’முருகா உனக்கு தெரியாதா plz கண்ணை மூடு...’
முருகனும் கண்ணை மூட...
அடியேன் காண்பேன் தேவி தரிசனம்...
முடிய மீண்டும் கிருஷ்ணா பஜார்..........

நன்றி
முருகா!!!!!

தபுசங்கர் கவிதகள்

என் வீட்டுக்கு வாயேன் 
உன்னை வைத்து
சில கவிதைகள் எழுதிவிட்டு
அப்படியே திருப்பி அனுப்பிவிடுகிறேன்

அழகாகத்தும்மி விட்டு யாரோ நினைக்கிறார்கள் என்றாயே
உன்னை யார்தான் நினப்பதில்லை..
 

அணிலின் முதுகில் கோடு போட்டது ராமர் என்றால்
புள்ளி மானின் முதுகில் புள்ளி போட்டது நீயாகத்தானிருக்கும்

நீ உன் உதட்டை கடிக்கும்போதெல்லாம் 
உன் பற்கள் முத்தமிட்டுவிடுகின்றன உனது உதட்டை

”வெறுங்கையோடு வந்துவிட்டு
பிறந்த நாளுக்கு 
இனிப்பு கொடுக்க வந்தேன்
என்கிறாயே’’ என்றேன்
“உனக்கு இனிப்பு கொடுக்க
கைகள் எதற்க்கு உதடுகள் போதாதா” என்றாய்


இப்பொழுது நீ என்னிடம்
ஓயாமல் இப்படிப்பேசுகின்ற காலம் இனிமையானதுதான் என்றாலும்
இதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல 
’ஒருவார்தை நீ என்னிடம் பேசிவிடமாட்டாயா “ என்று நான் ஏங்கியகாலமும்...








 நன்றி 
தபுசங்கர்!



பா.விஜய் காதலும் காமமும்...............

பின்னிக்கொள்
பிரிக்க முடியாதபடி
ஒட்டிக்கொள்
உரிக்க முடியாதபடி...


உதடுகளை திறந்து
உன்னை ஊற்று
நரம்பு மண்டலத்தில்
உன் வெப்பத்தை ஏற்று..

மோதி உடை
மோகத்தை!!
இன்னும் அடை
வேகத்தை!!

இங்கே உடைகளேது?
உனக்கு நான் உடை
எனக்கு நீ உடை!
 
சத்தம் போடு,
சத்தம் இல்லா காமம்
வியாபாரம்!!

மிருகங்கள் அல்ல
உச்சக்கட்டத்தை நோக்கி
உடனே விரைவதற்க்கு.....

காதல் இல்லாத காமமும்
காமம் இல்லாத காதலும்
அசிங்கமாகிறது!!


உணர்ச்சிவச யுவதியே!!!

உன்னை புணரத்துடிக்கிறேன் 
அல்ல 
உணரத்துடிக்கிறேன்


இப்போது நீ புல்லாங்குழல்
ஒன்பது துளைகளில்
ஒரு லட்சம் இராகம் பாடும்
பாடகன் நான்

இது இரு இன சேர்க்கைதான்
இதில் என்ன குற்றம்.....

மெய்ஞானத்திற்கும் 
நிர்வாணத்திற்கும்
தயாராவது முதலில்தான் சிரமம்....

முற்றும் துறந்த முனிவனே
முயற்சி செய்து எழுதியிருக்கிறான்
காமசூத்திரத்தை
உனக்கும் எனக்கும் என்ன???

இது கூடல் திருவிழா!
கோலாகலமாக கொண்டாடு!!
கலாசார நாடகங்கள் 
கட்டிலில் வேண்டாம்....

இது பிழையென்றால்
பிறப்பில்லை.
பிரபஞ்சமில்லை....

காமம் என்பது
காதல் கவிதையின்
எதிரொலி....

பொறுத்துக்கொள்
இப்போது நீ
உளிதாங்கும் கல்.........

இது ஆபாசம் என்றால்
இலக்கியம் எல்லாமே
கூண்டிலேறும்

கற்பனை சக்தி இல்லையேல்
காமத்தையும்
கடவுளையும்
வழிபடக்கூடாது
 
ஆந்த்மா உண்டென்றால் 
அதைக் காண்பது
ஆண்-பெண் கூடலிலும்
ஆன்மீக தேடலிலும்...


என் கடைசி ஆசை!
உன் போர்வையின் கதகதப்பில்
ஒரு சில வினாடி 
உறங்க வேண்டும்.....


“ நீ கிடைக்க வேண்டும்
இல்லா விட்டால்
நீ யாருக்கும் கிடைக்க கூடாது”



நன்றி
பா.வியஜ்..

சில்மிஸியே இதழில் இருந்து......


அழக்கூடத்தோணலை!!!!!

அப்போ சின்ன வயது அழக்கூட தோணலை,,
ஏதோ விசேஸம் மாதிரித்தான் தெரிந்தது,,
பந்தல் போட்டார்கள்!
தோரணம் கட்டினார்கள்
வாழை நட்டார்கள்
பாட்டு கூட பாடினார்கள் 
ஆனால் தேவாரம்
ஊரே வந்தார்கள்!!
ஆனால் சொல்லாமலே வந்தார்கள்
மேளம் கூட அடித்தார்கள், 
ஆனால் கொஞ்சம் பெரிய மேளம்!
அண்ணாவும் வாரானாம் 
பேராதெனியாவிலிருந்து!!
ஒருநாளும் வராத சொந்தங்கள் சிலவும்!!
சால்வையை கொடுத்து என்னை வேட்டிகட்ட சொன்னார்கள்!
வெட்கம்!! கனபேர் நிக்கினமே!!!
சாயியைக்கேட்டேன் ஏன் என்று!
கொஞ்சம் புரிந்தது 
ஏன் சாயி நீங்கள் நினைத்தால் முடியாதா?
அப்பாவை திருப்பித்தர?
அப்பா கிட்ட போகக்கூட இல்லை.
போய் கடைசியாக பார்க்கணும் எண்டு கூட தோணலை!!
ஏன் எனக்கு அழக்கூட்த்தோணலை!!
ஏன் அழணும்? எனக்கு புரியலை!!
அப்பாவை சந்தோசமாக வழியனுப்பினேனா??
எனக்கு புரியலை!!
அப்பாவுக்கு பொட்டு வைத்தது, 
அரிசி சாப்பிட கொடுத்தது 
பால் குடிக்க கொடுத்தது 
சிறு தணல் துண்டு தந்தார்கள்…
இன்னும் சில நினைவுகள்.......
மாசியம் மாதம் ஒரு விடுகை....
தெரியவில்லை ஒன்றுமே...
போக போக புரிந்தது
அப்பா நிரந்தராமாக போய்விட்டார் என்று!!
அன்று அழாததை பல நாள் இரவுகள் அழுதுகொள்கிறேன்...
இனி எப்போது கேட்ப்பேன் “ரூபன் படிப்பு எப்படி” என்ற வார்த்தையை!!!!

தேவதை

நீ யார் எனக்கு, 
எனது வாழ்க்கையின் முக்கியமான கால கட்டத்தில் எனது மனம் பூரா நிறைந்திருந்த தேவதை!!! 
எனது துன்பங்களில், என்னை தாங்கி பிடித்த தேவதை!! 
எனது கோபங்களில் திட்டு வாங்கிய தேவதை!!!
தேவதையை நான் கண்டதில்லை, 
ஆனால் தெவதைகள் உன்போலத்தான் இருக்க வேண்டும். 
ஏன் என்றால் எவ்வளவு திட்டினாலும், எவ்வளவு துன்பப்பட்டாலும் அன்பை குறைவில்லாமல் தருகிறாய்!!!!!!


காதல் மாதம்


  • காதல்(லி) க்காக மாதங்கள் காத்திருந்த காதலர்க்கு பெற்றோரின் சம்மதத்துக்காய் வருடங்கள் காத்திருக்க முடிவதில்லை!!!
  • ஒருதலைக்காதலில் இருக்கிற அழகே நாம் விரும்பிய அளவுக்கு அழகாக காதலிக்கலாம்
  • அமுத சுரபியில்
    விசம் ஏற்றி தருவது
    காதல்
  • எத்தனை முறை படித்து, பாடமாக்கி, prepare பண்ணி போனாலும் அவளை கண்டதும் மறந்து விடுகிறதே எல்லாம், Exam Hall இனுள் எல்லாம் மறந்து விடுவதைப்போல
  • காதலை முதலில் சொல்வது மறு ஜென்மம் எடுப்பது போலத்தான்.....
  • என் மார்பு கீறடி பெண்ணே அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே..
    கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா..