Sachin Tendulkar


Steve Jobs








DAD


Risks

Every dream carries with it certain risks, especially the risk of failure. But I am not stopped by risks.

சருகு வாசம்

எப்படி மறக்க முடியும்?

ஒரு தென்னங் கீற்று
அசையும் போதெல்லாம்
உன் சிரிப்பு சத்தத்தை.........!!!
 
மரத்தினடியிலிருந்து
நிலா பார்க்கையில்
ஜன்னலில் தெரிந்த
உன் முகத்தை!!!

ஒரு பூ
உதிர்வதை பார்க்கையில்
உன் கையசைப்பை....!!!

மழையின் 
முதல் துளி படுகையில்
உன் சிணுங்கலை...!!

சர்க்கைரை 
சாப்பிடும் போதெல்லாம்
உன் பெயரை....!!




அணையாமல் கிடந்த 
தீக்குச்சியை மிதிக்கையில்
உன் கோபத்தை.....!!!

எனக்கு வேர்த்துச்
சொட்டுகையில் 
உன் கைக்குட்டையின்
ஒத்தடத்தை.....!!

மொட்டை மாடிக்கு வந்து
காற்று வாங்குகையில்
உன் சேலைத்தலைப்பின்
விசிறலை...!!!

ஒரு நட்ச்சத்திரம்
விர்ரென்றுபூமியில்
விழுவதை பார்க்கையில்
உன் கடைப்பார்வை........!!

பூ வாசம்
நுகரும் போதெல்லாம்
உன் கழுத்தடியை.....!!!

மார்கழிக் குளிரில்
சுடு தேனீர் பருகுகையில்
உன் கதகதப்பை........!!!!!

இரவில் உட்கார்ந்து
இளையராஜா
பாட்டு கேட்கையில்
உன் முத்தத்தை.!!!

ஒரே ஒரு 
மேகம் மட்டும் போகையில்
உன் அழுகையை!!!!

என் கவிதைகளைத்
திரும்ப படிக்கையில்
உன் உதட்டோரப்
புன் முறுவலை.......!!

மின்சாரம் தொலைய
மெழுகுவர்த்தி ஏற்றுகையில்
உன் கண்களை...!!

மேற்க்கு சூரியன்
தரிசிக்கையில்
உன் கேசம் என் மீது
புரண்டதை.........

கண்ணீர் வழிந்து
உப்புக் கரிக்கையில்
உன் கடிதத்தை

ஒரு கல்லறையைக்
கடக்கும் போதெல்லாம்
இந்தக் கடைசி நாளை........!!!!

எப்படி மறக்க முடியும்..........


 நன்றி
தபு சங்கர்



போராடும் குணம்


பிடித்த பாடல் வரி

என் மார்பு கீறடி பெண்ணே அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே..
கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா....

பிடித்த பாடல் வரி 

பயணம்

போகுமிடம் தெரியாது
போகும் பாதை முன் பின் அறியாதது
ஆனாலும் உன்கூட பயணிப்பதால்
ஒவ்வொரு அடியும் இனிமையாக இருக்கிறது!!!

முத்தம்


முத்தம்
நான்கு உதடுகளும்
ஒரு தலைப்புச் செய்தியை 
வாசிக்கிறது
 
முத்தம்

புத்தகம் இல்லாமல்
வாசிக்கபடும்
நூலகம்

முத்தம்

திடமா
திரவமா
வாயுவா
இருபது நூற்றாண்டு காலமாக
நிகழ்த்தப்படும்
இதழாய்வு

முத்தம்

ரத்தத்தின் கைதட்டல்

முத்தம்

ஐந்து புலன்களும்
சேர்ந்து மணக்கும்
திரெளபதி
 
முத்தம்

தேனை ஊற்றிக்கொண்டே 
தேனை உறிஞ்சிக்கொண்டே
கிட்டும்
இரட்டை அத்வைதம்

முத்தம்

அகத்தியப்பசி

முத்தம்

உதடு வக்கீல்கள்
சத்தமில்லாமல்
வாதாடும் வழக்கு

முத்தம்

குருதியைக்
கொதிக்கவைக்கும்
மலர் உலை

 
முத்தம்

இரண்டு ஓவியங்கள்
ஒன்றில் ஒன்றை
வரைந்து கொள்வதற்க்கான
வாய்ப்பு

முத்தம்

உயிருக்கு 
ஓர் உயிர் அனுப்ப்பும்
ஈரத்தந்தி


முத்தம்

இரு உதட்டில்
இயற்றப்படுவது ஆகையால்
திருக்குறள்

முத்தம்

சல்லி நாளங்களிலும்
பயணித்து
அணுக்களை ஒளிரவிடும்
மின்சாரம்

முத்தம்

ஒரு விடுகதையை
எழுத வந்து
தொடர்கதையை எழுத
துவக்கி வைப்பது

முத்தம்

ஒரு ஜீவனின்
மொழியை
இன்னொரு ஜீவன்
மொழிபெயர்க்கிறது!!!



 நன்றி
தபு சங்கர்




வெற்றி

பசியோலை இருக்கிறவனை வேடிக்கை பார்க்கவைச்சு சிக்கின் பிரியாணி சாப்பிடுறது வெற்றி இல்லை; 
வன்முறை

 நன்றி
பிரகாக்ஷ் ராஜ்

வாழ்க்கையில் நீ

 நீ இருந்தா வாழ்க்கை ஒருவேளை ரொம்ப நல்லா இருக்கும்தான், 
ஆனா நீ இல்லேன்னாலும் நிச்சயமா வாழ்க்கை நடக்கும்!! 
யுகம் யுகமா இதுதான் இயற்க்கை!!!

நன்றி 
பிரகாக்ஷ் ராஜ்


வாழ்க்கை


என அனுபவங்கள் மூலமாத்தான் எதையும் புரிஞ்சுக்க விரும்புறேன், உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாத்தையும் அனுபவிக்கவுல் ரசிக்கவும்தானே வாழ்க்கை!!!

என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கிறேன், விட்டுவிடுங்கள். உங்க பயங்களை, உங்க ஆசைகளை, உங்க குழப்பங்களை என் மேலே திணிக்காதீங்க, ப்ளீஸ். அடுத்தவங்க வாழ்க்கையை என்னாலே வாழ முடியாது!!!

 நன்றி
பிரகாக்ஷ் ராஜ்

முயற்சி

பல கணங்களில் தோற்க்கலாம், சில கணக்களில் ஜெயிக்கலாம், அந்த சில கணங்களில் ஜெயிப்பதற்க்காக எத்தனை முறை வேண்டுமானாலும்
தோற்ப்பதற்க்கு தயாராகவே இருக்கிறேன் எப்போதும்

சில்மிசியே

இளமைப்பூங்காவே

முறுக்கேறிய 
முல்லைக்கொடி நீ

ஒரு சில வினாடி
பூமியில் புதுவாசம்
நீ உடை மாற்றும் நேரம்

எந்தப்பூவிலிருந்தும்
திரட்ட முடியாத தேன்
உன் இதழ்

எந்த காற்றாலும் 
புரட்ட முடியாத மண் மேடு
உன் மார்பு...
 
கனிக்களஞ்சியமே 
உன்னை உலுக்குகிறேன்
மரத்தில் வைத்தே
சுவைக்கும் பழ வகைகள்
உன்னிடமே உண்டு

நீ மல்லிகை மணம் வீசும் 
மஞ்சள் கிழங்கு

சாப்பிடத்தான் போகிறேன்
உன் 
சர்கரை கோபுரத்தை


ஒரு குழல் போட்டு 
குடிக்க வேண்டும்
உன் கன்னக்குழி
தித்திப்பை

ஒரு பீற்றூட் காயின் நிறத்தில்
சிவந்த உன் உதட்டில்
சிறிது நேரம் சாகவா சொல்..........

 நன்றி
 பா.வியஜ் 

சராசரி காதலன் நான்

அவள் good morning sms இற்க்காக தவமிருந்து தூக்கம் கலைக்கும்
சராசரி காதலன் நான்

அவளுக்கு பிறந்த நாளோ முதலில் wish பண்ணணும் என்பதற்க்காக
முதல் நாள் இரவு 10 மணியிலிருந்து தவமிருக்கும்


சராசரி காதலன் நான்
 

எனக்கு பிறந்த நாளா யார் call பண்ணினாலும் அவளின் வாயால் முதல் வாழ்த்து கேட்கணும் என்பதற்க்காக call recieve பண்ணாத

சராசரி காதலன் நான்


அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் திருவிழாக்கூட்டத்தில் அவளை தேடிய
சராசரி காதலன் நான்

அவள் பின்னாலேயே, அவளுக்கு தெரியாமல் அவள் நிழலாய் தொடர்ந்த
சராசரி காதலன் நான்


அவள் போடும் தொப்பியை போன்றொரு தொப்பியை தேடி அலைந்த
சராசரி காதலன் நான்

அவள் பெயர்க்கு அக்கம் பக்கம் பார்த்து யாருமில்லா நேரத்தில்
அருச்சனை செய்த, செய்யும்
சராசரி காதலன் நான்

அவளது பெயரை எந்த(ன்) புத்தகத்தின் முதல் பக்கத்திலும் எழுதிய, எழுதும்
சராசரி காதலன் நான்

அவள் பிறந்த நாளுக்கு “என் அம்மாடை birthday டா” என நாகூசாமல் பொய்சொல்லி party கொடுத்த( என்ன பொய் ?????_)
சராசரி காதலன் நான்

அவள் போன dispencery இக்கு மருந்தில்லா காய்ச்சலுக்கு மருந்தெடுக்க போன
சராசரி காதலன் நான்
 

அவள் நின்றிருந்த சுவரருகே சென்று என் உயரம் பார்த்த
சராசரி காதலன் நான்

அவள் பெயரை பொறிப்பதற்க்காய் என் கையை லாம்பினால் சுட்ட
சராசரி காதலன் நான்

அவள் என்று நினைத்து அக்காவுக்கு “i love you" என sms அனுப்பிய
சராசரி காதலன் நான்

அவள் ஐந்து நிமிட தரிசனத்துக்காய் இரு மணி நேரம் காத்திருந்த
சராசரி காதலன் நான்

அவள் “i love u" என்ற வார்த்தைக்காய் மூன்று வருடம் தவமிருந்த
சராசரி காதலன் நான்

அவள் தரும் “ச்ச்” என்ற முத்தத்துக்காய்(telephone) ஒரு மணி நேரம் யாசகம் கேட்க்கும்
சராசரி காதலன் நான்

அவள் உடனான வாழ்வுக்காக ஆண்டுகள் பல காத்திருக்க போகும் 
சராசரி காதலன் நான்


அவள் அனுப்பும் good nite sms இக்காய் தூக்கம் போக்க நடக்கும் 
சராசரி காதலன் நான்