ஒரு தென்னங் கீற்று
அசையும் போதெல்லாம்
உன் சிரிப்பு சத்தத்தை.........!!!

மரத்தினடியிலிருந்து
நிலா பார்க்கையில்
ஜன்னலில் தெரிந்த
உன் முகத்தை!!!
ஒரு பூ
உதிர்வதை பார்க்கையில்
உன் கையசைப்பை....!!!
மழையின்
முதல் துளி படுகையில்
உன் சிணுங்கலை...!!
சர்க்கைரை
சாப்பிடும் போதெல்லாம்
உன் பெயரை....!!
அணையாமல் கிடந்த
தீக்குச்சியை மிதிக்கையில்
உன் கோபத்தை.....!!!
எனக்கு வேர்த்துச்
சொட்டுகையில்
உன் கைக்குட்டையின்
ஒத்தடத்தை.....!!
மொட்டை மாடிக்கு வந்து
காற்று வாங்குகையில்
உன் சேலைத்தலைப்பின்
விசிறலை...!!!
ஒரு நட்ச்சத்திரம்
விர்ரென்றுபூமியில்
விழுவதை பார்க்கையில்
உன் கடைப்பார்வை........!!

பூ வாசம்
நுகரும் போதெல்லாம்
உன் கழுத்தடியை.....!!!
மார்கழிக் குளிரில்
சுடு தேனீர் பருகுகையில்
உன் கதகதப்பை........!!!!!
இரவில் உட்கார்ந்து
இளையராஜா
பாட்டு கேட்கையில்
உன் முத்தத்தை.!!!
ஒரே ஒரு
மேகம் மட்டும் போகையில்
உன் அழுகையை!!!!
என் கவிதைகளைத்
திரும்ப படிக்கையில்
உன் உதட்டோரப்
புன் முறுவலை.......!!
மின்சாரம் தொலைய
மெழுகுவர்த்தி ஏற்றுகையில்
உன் கண்களை...!!
மேற்க்கு சூரியன்
தரிசிக்கையில்
உன் கேசம் என் மீது
புரண்டதை.........
கண்ணீர் வழிந்து
உப்புக் கரிக்கையில்
உன் கடிதத்தை
ஒரு கல்லறையைக்
கடக்கும் போதெல்லாம்
இந்தக் கடைசி நாளை........!!!!
எப்படி மறக்க முடியும்..........
நன்றி
தபு சங்கர்
.jpg)
.jpg)





0 comments:
Post a Comment