சராசரி காதலன் நான்
அவளுக்கு பிறந்த நாளோ முதலில் wish பண்ணணும் என்பதற்க்காக
முதல் நாள் இரவு 10 மணியிலிருந்து தவமிருக்கும்
சராசரி காதலன் நான்
எனக்கு பிறந்த நாளா யார் call பண்ணினாலும் அவளின் வாயால் முதல் வாழ்த்து கேட்கணும் என்பதற்க்காக call recieve பண்ணாத
சராசரி காதலன் நான்
அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் திருவிழாக்கூட்டத்தில் அவளை தேடிய
சராசரி காதலன் நான்
அவள் பின்னாலேயே, அவளுக்கு தெரியாமல் அவள் நிழலாய் தொடர்ந்த
சராசரி காதலன் நான்
அவள் போடும் தொப்பியை போன்றொரு தொப்பியை தேடி அலைந்த
சராசரி காதலன் நான்
அவள் பெயர்க்கு அக்கம் பக்கம் பார்த்து யாருமில்லா நேரத்தில்
அருச்சனை செய்த, செய்யும்
சராசரி காதலன் நான்
அவளது பெயரை எந்த(ன்) புத்தகத்தின் முதல் பக்கத்திலும் எழுதிய, எழுதும்
சராசரி காதலன் நான்
அவள் பிறந்த நாளுக்கு “என் அம்மாடை birthday டா” என நாகூசாமல் பொய்சொல்லி party கொடுத்த( என்ன பொய் ?????_)
சராசரி காதலன் நான்
அவள் போன dispencery இக்கு மருந்தில்லா காய்ச்சலுக்கு மருந்தெடுக்க போன
சராசரி காதலன் நான்
அவள் நின்றிருந்த சுவரருகே சென்று என் உயரம் பார்த்த
சராசரி காதலன் நான்
அவள் பெயரை பொறிப்பதற்க்காய் என் கையை லாம்பினால் சுட்ட
சராசரி காதலன் நான்
அவள் என்று நினைத்து அக்காவுக்கு “i love you" என sms அனுப்பிய
சராசரி காதலன் நான்
அவள் ஐந்து நிமிட தரிசனத்துக்காய் இரு மணி நேரம் காத்திருந்த
சராசரி காதலன் நான்
அவள் “i love u" என்ற வார்த்தைக்காய் மூன்று வருடம் தவமிருந்த
சராசரி காதலன் நான்
அவள் தரும் “ச்ச்” என்ற முத்தத்துக்காய்(telephone) ஒரு மணி நேரம் யாசகம் கேட்க்கும்
சராசரி காதலன் நான்
அவள் உடனான வாழ்வுக்காக ஆண்டுகள் பல காத்திருக்க போகும்
சராசரி காதலன் நான்
அவள் அனுப்பும் good nite sms இக்காய் தூக்கம் போக்க நடக்கும்
சராசரி காதலன் நான்





0 comments:
Post a Comment