அழக்கூடத்தோணலை!!!!!

அப்போ சின்ன வயது அழக்கூட தோணலை,,
ஏதோ விசேஸம் மாதிரித்தான் தெரிந்தது,,
பந்தல் போட்டார்கள்!
தோரணம் கட்டினார்கள்
வாழை நட்டார்கள்
பாட்டு கூட பாடினார்கள் 
ஆனால் தேவாரம்
ஊரே வந்தார்கள்!!
ஆனால் சொல்லாமலே வந்தார்கள்
மேளம் கூட அடித்தார்கள், 
ஆனால் கொஞ்சம் பெரிய மேளம்!
அண்ணாவும் வாரானாம் 
பேராதெனியாவிலிருந்து!!
ஒருநாளும் வராத சொந்தங்கள் சிலவும்!!
சால்வையை கொடுத்து என்னை வேட்டிகட்ட சொன்னார்கள்!
வெட்கம்!! கனபேர் நிக்கினமே!!!
சாயியைக்கேட்டேன் ஏன் என்று!
கொஞ்சம் புரிந்தது 
ஏன் சாயி நீங்கள் நினைத்தால் முடியாதா?
அப்பாவை திருப்பித்தர?
அப்பா கிட்ட போகக்கூட இல்லை.
போய் கடைசியாக பார்க்கணும் எண்டு கூட தோணலை!!
ஏன் எனக்கு அழக்கூட்த்தோணலை!!
ஏன் அழணும்? எனக்கு புரியலை!!
அப்பாவை சந்தோசமாக வழியனுப்பினேனா??
எனக்கு புரியலை!!
அப்பாவுக்கு பொட்டு வைத்தது, 
அரிசி சாப்பிட கொடுத்தது 
பால் குடிக்க கொடுத்தது 
சிறு தணல் துண்டு தந்தார்கள்…
இன்னும் சில நினைவுகள்.......
மாசியம் மாதம் ஒரு விடுகை....
தெரியவில்லை ஒன்றுமே...
போக போக புரிந்தது
அப்பா நிரந்தராமாக போய்விட்டார் என்று!!
அன்று அழாததை பல நாள் இரவுகள் அழுதுகொள்கிறேன்...
இனி எப்போது கேட்ப்பேன் “ரூபன் படிப்பு எப்படி” என்ற வார்த்தையை!!!!

0 comments: