ஏதாவது கண்காட்ச்சி, ஆர்ப்பாட்டம் என்றால் முன்னிற்பேன்
அங்கே அவள் வருவாள் என்ற நம்பிக்கையில்.
((SCHOOL UNIFORM இலை பெண்கள் அழகே தனி))
அப்படித்தான் ஒருமுறை JAFFNA UNIVERSITY இல் கண்காட்ச்சி நானும் போனேன் எமது பாடசலை நண்பர்களுடன்………
”அடெய் உண்டை சரக்கு வந்ததம்டா வா தேடுவோம்”
(அவங்கடை சரக்கு யார் என்று சத்தியமா எனக்கு தெரியாது என்பது அவனுக்கு தெரியாது)
நண்பர்களையும் கூட்டிகொண்டு
தேடினேன் தேடினேன் காணவேயில்லை.
அட இது SCIENCE கண்காட்சிதானே அவள் வரமாட்டாள் தானே
மனம் சமாதானம் சொன்னது…..
ஆனால் எங்கோ தூரத்தில் அவள் சாயலில் ஒருத்தி….
தேடினேன் தேடினேன்
காணலை…
வீடுதிரும்ப வருகையில் அவளது VAN
எதற்க்கும் எட்டிப்பார்க்கிறேன்
உள்ளே அவள் சாயலில்
இல்லை அவளேதான்
அன்றைய நாளை வீணாக்கிவிட்டேனோ???
மனம் ஏதோ செய்தது…..
என்ன செய்ய?
விதி.
வீடு திரும்புகையில் அவள் SCHOOL பாதையை பயன்படுத்துவது வழக்கம்…
அங்கே அவள் வந்த VAN வந்திட்டுது…..
புளியடியில் காத்திருக்கிறேன் நண்பர்களுடன்
யூஸ் குடிக்கும் சாக்கில்.
அவள் வர முன்தொடர்கிறது என் சைக்கிள்……
5 நிமிட வீதி உலா
தேவி(கள்)தரிசனம்
முக்கியசந்தி நண்பர்களுக்கு BYE
நானும் அவளும் மட்டும்
முன்பின்னே!!!
தூரே தெரிகிறது,
அவள் சித்தி நிற்பது.
கால்கள் வேகமாகின்றன....
ஆனால்,!
அதிர்ச்சி!
அவள் சித்தி என்னை மறிக்கின்றார்,
அவள் வீட்டுக்கு முன்னால்.
நெஞ்சு படபடத்து..
என்ன கேட்க்க போறங்களோ???
”தம்பி எக்சிபிசனாலையோ வாரீர்”
”………… (பெயரைச்சொல்லி) காணலை” என்றார் நான் அவளை
காதலிப்பது தெரியாமல் என்னிடமே????
பின்னலைதான் வாறாள் என்று சொல்லவா முடியும்?????
ஏதோசொல்ல எடுக்க
”சித்தி நான் வந்திட்டன்” (VOICE கூட நல்லத்தான் இருக்கு) என்றபடி சின்ன சிரிப்புடன் அவள்
என்னுள் ஒரு சிரிப்பு
எம் சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் சித்தி
நான் அவள் சித்தியை சினேகிதம் பிடித்த சந்தோசத்துடன் வீடு நோக்கி…….
உண்மைச்சம்பவமோ????
எனக்கு தெரியாது!!!
வாசித்து புரிந்துகொண்டாசரி!!!!!!!!!!





0 comments:
Post a Comment