முருகன் தரிசனம்

எல்லோரும்
கோவிலுக்கு போவது...
சாமி கும்பிட,
முருகனுக்கு இரண்டு
எனக்கு ஒன்றை set பண்ண உதவ மாட்டானா என்ன???
முருகா sorry!
உனக்கு மட்டும் தெரிந்ததை உலகுக்கு சொல்றேன்!
 
தினம் தினம் போவேன் முருகன் கோவில்...
பக்கத்தில் இருக்கும் தேவி கோவிலில்
எப்பவாவது தேவி தரிசனம்!
பின் தேவி முருகன் கோவிலுக்கே வந்து தரிசனம் தர தொடங்கினாள்...
ஆனால் அந்த timing சச்சினுக்கும் வராது..
அப்படி time பண்ணி போவேன் கோவிலுக்கு...

becon முடிய வந்து கிருஷ்ணா கடையில் ஒரு பஜார் போடுறது.
தேவி வரும் நேரமானால் சைக்கிள் வீட்டு பக்கம் திரும்பிடும்...
தூரத்தே அவள் வருவது தெரிந்தால்...
‘’மச்சான் அம்மா கடைக்கு போகணும் எண்டவாடா நான் போட்டு வரட்டே?”
(((( என் காதலை அவள் ok சொல்லி பின்னும் அவங்களுக்கு நான் love பண்ணுறதும், ஏன் இடையிலை நான் escape ஆறனான் என்றும் தெரியாது..... நான் பெருமையாய் சொன்ன பின் தான் தெரியும்)))))

சைக்கிள் கிழம்பிடும் அவள் பின்னே!!!!
அவளை வீட்டு வாசல் வரை விட்டிட்டு வீடு போவேன்
“அம்மா கடைக்கு போகணுமோ” வாசலில் இருந்தே குரல் குடுப்பேன்.
ஓம் என்றால் சரி...
இல்லை என்றால் 
"mixture வேண்டணும் காசு எடுங்க”
அவசர அவசரமா முகம் கழுவி சாமி கும்பிட்டிட்டு time பார்ப்பேன் 10 minutes ஆகியிருந்தால் சைக்கிள் வெளிக்கிடும்,,, 
இல்லை என்றால் காத்திருந்து வெளிக்கிடும்.....

ரோட்டிலிருந்து பார்க்க கோவிலடியில் சைக்கிள் நின்றால் தெரியும், தெரிந்தால் கோவிலை நோக்கி பயணம்...
இல்லை என்றால் ஒன்று இரண்டு வட்டம் அடிக்கும்....
வட்டம் அடிக்கும் போது தெரிந்த அண்ணாமார்கள், ......................
ஒருவாறு சமாளித்திடுவேன்......
((நானே பேனையை கீழே போட்டு பின் எடுப்பது!
எது சைக்கிளில் பிழை மாதிரி இறங்கி நிண்டு பார்ர்கிறது))
கோவிலில் நானும் அவளும் முருகனும் ஐயரும் மட்டும்...
சிலநேரம் ஐயர் கூட இல்லை!!
’முருகா உனக்கு தெரியாதா plz கண்ணை மூடு...’
முருகனும் கண்ணை மூட...
அடியேன் காண்பேன் தேவி தரிசனம்...
முடிய மீண்டும் கிருஷ்ணா பஜார்..........

நன்றி
முருகா!!!!!

0 comments: