பா.விஜய் காதலும் காமமும்...............

பின்னிக்கொள்
பிரிக்க முடியாதபடி
ஒட்டிக்கொள்
உரிக்க முடியாதபடி...


உதடுகளை திறந்து
உன்னை ஊற்று
நரம்பு மண்டலத்தில்
உன் வெப்பத்தை ஏற்று..

மோதி உடை
மோகத்தை!!
இன்னும் அடை
வேகத்தை!!

இங்கே உடைகளேது?
உனக்கு நான் உடை
எனக்கு நீ உடை!
 
சத்தம் போடு,
சத்தம் இல்லா காமம்
வியாபாரம்!!

மிருகங்கள் அல்ல
உச்சக்கட்டத்தை நோக்கி
உடனே விரைவதற்க்கு.....

காதல் இல்லாத காமமும்
காமம் இல்லாத காதலும்
அசிங்கமாகிறது!!


உணர்ச்சிவச யுவதியே!!!

உன்னை புணரத்துடிக்கிறேன் 
அல்ல 
உணரத்துடிக்கிறேன்


இப்போது நீ புல்லாங்குழல்
ஒன்பது துளைகளில்
ஒரு லட்சம் இராகம் பாடும்
பாடகன் நான்

இது இரு இன சேர்க்கைதான்
இதில் என்ன குற்றம்.....

மெய்ஞானத்திற்கும் 
நிர்வாணத்திற்கும்
தயாராவது முதலில்தான் சிரமம்....

முற்றும் துறந்த முனிவனே
முயற்சி செய்து எழுதியிருக்கிறான்
காமசூத்திரத்தை
உனக்கும் எனக்கும் என்ன???

இது கூடல் திருவிழா!
கோலாகலமாக கொண்டாடு!!
கலாசார நாடகங்கள் 
கட்டிலில் வேண்டாம்....

இது பிழையென்றால்
பிறப்பில்லை.
பிரபஞ்சமில்லை....

காமம் என்பது
காதல் கவிதையின்
எதிரொலி....

பொறுத்துக்கொள்
இப்போது நீ
உளிதாங்கும் கல்.........

இது ஆபாசம் என்றால்
இலக்கியம் எல்லாமே
கூண்டிலேறும்

கற்பனை சக்தி இல்லையேல்
காமத்தையும்
கடவுளையும்
வழிபடக்கூடாது
 
ஆந்த்மா உண்டென்றால் 
அதைக் காண்பது
ஆண்-பெண் கூடலிலும்
ஆன்மீக தேடலிலும்...


என் கடைசி ஆசை!
உன் போர்வையின் கதகதப்பில்
ஒரு சில வினாடி 
உறங்க வேண்டும்.....


“ நீ கிடைக்க வேண்டும்
இல்லா விட்டால்
நீ யாருக்கும் கிடைக்க கூடாது”



நன்றி
பா.வியஜ்..

சில்மிஸியே இதழில் இருந்து......


0 comments: