உன்னை வைத்து
சில கவிதைகள் எழுதிவிட்டு
அப்படியே திருப்பி அனுப்பிவிடுகிறேன்
அழகாகத்தும்மி விட்டு யாரோ நினைக்கிறார்கள் என்றாயேஉன்னை யார்தான் நினப்பதில்லை..
அணிலின் முதுகில் கோடு போட்டது ராமர் என்றால்
புள்ளி மானின் முதுகில் புள்ளி போட்டது நீயாகத்தானிருக்கும்
நீ உன் உதட்டை கடிக்கும்போதெல்லாம்
உன் பற்கள் முத்தமிட்டுவிடுகின்றன உனது உதட்டை
”வெறுங்கையோடு வந்துவிட்டு
பிறந்த நாளுக்கு
இனிப்பு கொடுக்க வந்தேன்
என்கிறாயே’’ என்றேன்
“உனக்கு இனிப்பு கொடுக்க
கைகள் எதற்க்கு உதடுகள் போதாதா” என்றாய்
இப்பொழுது நீ என்னிடம்
ஓயாமல் இப்படிப்பேசுகின்ற காலம் இனிமையானதுதான் என்றாலும்
இதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல
’ஒருவார்தை நீ என்னிடம் பேசிவிடமாட்டாயா “ என்று நான் ஏங்கியகாலமும்...
நன்றி
தபுசங்கர்!





0 comments:
Post a Comment